தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை

வேதாரண்யம், மே 24: வேதாரண்யம் மறைஞாயநல்லூரில் அமைந்துள்ளது மேல மறைக்கடார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு உள்ள பைரவருக்கு தேய்பிறையையொட்டி சிறப்பு யாகபூஜை ஆனந்த் சிவச்சாரியார் தலைமையில் நடைபெற்று கடம் புறப்பாடு செய்யப்பட்டுகோவிலை வலம் வந்து பின்பு பைரவருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்ட 16 வயது திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காலபைரவர் சிறப்பு யாகம் மற்றும் விழா ஏற்பாடுகளை ஒப்பந்தகாரர் சதாசிவம் ஜோதிலெட்சுமி, பஞ்சநதிக்குளம் சரவணன் விக்னேஷ்வரி குடும்பத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Related Stories: