கூடுதல் இழப்பீடு வழங்க கோரி நகாய் அலுவலகம் முற்றுகை

புவனகிரி, மே 14: விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரை தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த பணிகளுக்காக பல ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நிலங்களை வழங்கி உள்ளனர். இந்த நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு தர வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அரசு அதிகாரிகளிடம் பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூடுதல் இழப்பீடு வழங்க வலியுறுத்தி நேற்று முற்றுகை போராட்டம் நடந்தது. பரங்கிப்பேட்டை அருகே பெரியகுமட்டி கிராமத்தில் உள்ள நகாய் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குமு உறுப்பினர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இதில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்றனர்.அப்போது கூடுதல் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Related Stories: