கோரா பட்டு விலை உயர்வை கண்டித்து குடந்தையில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், மே 12: கோரா பட்டு விலை உயர்வை கண்டித்து கும்பகோணத்தில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த 2021 ஜனவரி மாதம் ஒரு கிலோ கோரப்பட்டு விலை ரூ.3,700 விற்றதை தொடர்ந்து, 2022 மார்ச் மாதம் ஒரு கிலோ ரூ.6,800 ஆக விலை உயர்ந்து கோராப்பட்டு விலை 110 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. இதனால் பட்டு கைத்தறி நெசவுத் தொழில் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இதனை ஒன்றிய அரசு விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணம் பட்டு ஜவுளி உற்பத்தியாளர்கள், தயாரிப்பாளர்கள், பட்டு வியாபாரிகள், கோரா வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் துணைத்தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்ட பொறுப்பாளர் செல்வம், ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம், ஒருங்கிணைப்புக்குழு பொருளாளர் சுப்புராமன், கவுன்சிலர் அனந்தராமன், தங்கவேல், செல்வம், செல்வம், சிஐடியூ அனந்தராமன் உள்ளிட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்துகொண்டு கோரா பட்டு விலையை கட்டுப்படுத்த கோரி முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: