தாந்தோணிமலை அருகே துணிகரம் வீட்டு கதவை உடைத்து ரூ.60 ஆயிரம் திருட்டு

கரூர், மே 12: கரூர் தாந்தோணிமலை அருகே வீட்டின் கதவை உடைத்து அலமாரியில் வைத்திருந்த ரூ. 60 ஆயிரம் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கரூர் தாந்தோணிமலை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(44). இவர் தனியார் மசாலா நிறுவனத்தில் டீலராக பணியாற்றி வருகிறார். இவர் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், கடந்த 6ம் தேதி அன்று வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டதாகவும், மறுநாள் வந்து பார்த்த போது, வீட்டின் முன் பக்க கதவை உடைந்து கிடந்ததாகவும். உள்ளே அலமாரியில் வைத்திருந்த ரூ. 60 ஆயிரம் பணத்தை காணவில்லை எனவும் தெரிவித்திருந்தார். அதன்பேரில் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: