அந்தியூரில் 100 நாள் வேலைத்திட்ட பெண் தொழிலாளர்கள் தர்ணா

அந்தியூர், மே 10:  அந்தியூர் அடுத்துள்ள உள்ள பர்கூர் ஊராட்சியில் 33 மலைக்கிராமங்கள் உள்ளன. இங்கு 100 நாள் வேலையுறுதித் திட்டத்தின் கீழ் 9000 பயனாளிகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வேலை அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பர்கூர் ஊராட்சியில் 1000 பேருக்கு மட்டுமே புதிய அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8000 பேருக்கு இன்னும் வேலை அட்டை தராததால் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுடன் நூறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர் சங்கத்தினர் அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்கள் தெரிவிக்கையில், மலைவாழ் பெண்களுக்கு ஒரே வேலைவாய்ப்பு ஆதாரமாக இந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மட்டுமே உள்ளது. விடுபட்டவர்களுக்கு புதுப்பித்த பணி அட்டை உடனடயாக வழங்குவதுடன் வேலையும் ஒதுக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சேர்ந்த சரவணன், சிவசங்கர், போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். 15 நாட்களுக்குள் பணி அட்டை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்களது போராட்டத்தை விலக்கிக் கொண்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories: