வேளாண் பல்கலை., பட்டமளிப்பு விழாவுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை, ஏப்.25: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் 43-வது பட்டமளிப்பு விழாவிற்கு, கடந்த மார்ச் 31 வரை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ, மாணவிகளிடம் இருந்து பட்டங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவம் மற்றும் இதர விவரங்கள் பல்கலைக்கழக இணையதளமான www.tnau.ac.in மூலம் வரும் 25-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணத்தை SBI Collect (The Comptroller, TNAU, Coimbatore) மூலம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். பட்டமளிப்பு விழாவிற்கு, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய இணைப்புகளுடன் வரும் மே 18-ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 0422-6611506 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: