கீழக்கரை, ஏப். 22: கீழக்கரையில் 2 மீன்கடை மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கு ஏராளமானோர் தினமும் வந்து மீன் வாங்கி சென்று வருகின்றனர். இந்நிலையில் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகிலுள்ள புதிய மீன் மார்க்கெட் கடை கட்டிட மேற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்கு வருவோர்கள் இந்த மேற்கூரை கீழே நின்றுதான் அச்சத்துடன் மீன் வாங்கி செல்கின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன் நகராட்சி நிர்வாகம் உடனடியாக மீன் மார்க்கெட் மேற்கூரையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.