தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆண்டிபட்டி, ஏப். 20: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தைச் சேர்ந்த சடையாண்டி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் துரைராஜ் கோரிக்கை விளக்க உரையாற்றினார். இதில், ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை காவலர்கள் மற்றும் ஊராட்சி எழுத்தாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்.

தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு தற்போது அரசால் வழங்கப்பட்டு வரும் கூடுதல் ஓய்வூதியம் 80 வயதில் வழங்குவதை 70 வயது முடிந்தவுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தேனியில் ஆர்ப்பாட்டம்தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேனி வட்ட கிளைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், ‘தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கு 80 வயதில் கூடுதல் ஓய்வூதியம் வழங்குகிறது. இதை 70 வயது முடிந்தவுடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related Stories: