அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு 2.76 கோடியில் புதிய கட்டிடத்தை முதல்வர் திறந்தார்: எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் துவக்கி வைத்தார்

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிக்கு 2.76 கோடி மதிப்பில் புதிய கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஊராட்சி கிளாம்பாக்கம், அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். அப்பள்ளிக்கு கூடுதலாக 2 மாடிகள் கொண்ட கட்டிடம் 2.76 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதையடுத்து, ஊரப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி தலைமையில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், எம்எல்ஏவுமான வரலட்சுமி மதுசூதனன் புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், ஒன்றிய கவுன்சிலர்கள் மோகனா கண்ணன், தமிழ்ச்செல்வி செல்வம், பி.எஸ்.ராஜா, ஜே.கே.தினேஷ், ஓட்டேரி குணா உள்பட பலர் கலந்து கொண்டனர். இறுதியில், தேசிய மாணவர் படை முதல் நிலை அலுவலர் எபினேசர் நன்றி கூறினார்.

Related Stories: