கொன்னையூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு

பொன்னமராவதி, ஏப். 11: கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு செய்தனர். பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்து மாரியம்மன் திருக்கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் அலகு குத்தியும், அக்னிசட்டி தூக்கியும், பால்குடம் எடுத்துச்சென்று வழிபாடு செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் செல்லும் வழி நெடுக நீர், மோர், பானகம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. கோவிலின் முன்பாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல் ரகுமான் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கோயிலின் பங்குனி பெருந்திருவிழா இன்று நடக்கின்றது.

Related Stories: