சுதந்திர தின அமுத பெருவிழா பல்வேறு அரசு துறை திட்ட விளக்க கண்காட்சி

திருவாரூர், மார்ச் 30: 75வது சுதந்திர தின விழா அமுத திருவிழாவையொட்டி விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழக வீரர்களின் புகைப்பட கண்காட்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திறந்துவைத்தார். திருவாரூர் மாவட்ட செய்தி துறையின் சார்பில் 15வது சுதந்திர தின விழா சுதந்திரத்திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்ற தமிழக வீரர்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் அரசு துறைகளை சேர்ந்த பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்த விளக்க கண்காட்சி திருவாரூர் பனகல் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை நேற்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் திறந்து வைத்து பேசுகையில், இதில் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளின் குறிப்புகள் வாழ்க்கை வரலாறுகள், தேசபக்தி உணர்வுகள் போன்றவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. மேலும் தமிழக அரசின் சார்பில் வருவாய்த்துறை, மருத்துவத்துறை, வேளாண் துறை, கைத்தறித் துறை, இந்து அறநிலையத்துறை, தாட்கோ, ஊரக வளர்ச்சி துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் திட்டங்கள் குறித்து கண்காட்சியில் அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் அனைவரும் கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் டிஆர்ஓ சிதம்பரம், மகளிர் திட்ட இயக்குனர் லேகா, நகராட்சி தலைவர் புவனப்பிரியா செந்தில், சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, வேளாண் துறை இணை இயக்குனர் சிவக்குமார் உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: