பரமக்குடி அரசு கல்லூரியில் தொழில் முனைவோர் கருத்தரங்கு

பரமக்குடி, மார்ச் 26:  பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் உயிர்  வேதியியல் துறை சார்பில் தொழில் முனைவோர்- தொழில் மேம்பாடு குறித்த 2 நாள்  கருத்தரங்கு நடந்தது. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் நடந்த  இக்கருத்தரங்கை கல்லூரி முதல்வர் குணசேகரன் துவக்கி வைத்தார். துறை  தலைவர்கள் மணிமாறன், சிவக்குமார் துவக்கி வைத்தனர். உயிர் வேதியியல் துறை  தலைவர் ஆஷா வரவேற்றார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மதுக்குமார்,  பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து நபார்டு  மதுரை வேளாண் வணிக காப்பீட்டு மன்றத்தின் தலைமை நிர்வாக  அதிகாரி சிவக்குமார் வேளாண் வணிக துறைகளில் தொழில் முனைவோர்,  தொழில்முனைவோர் மேம்பாட்டு மைய அலுவலர் மோகன் தொழில் முனைவோருக்குகான  அரசின் திட்டங்கள், காரைக்குடி சிக்ரி மூத்த விஞ்ஞானி ராஜேந்திரன்  ஒருங்கிணைந்த திறன் முன் முயற்சிகளின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி  திட்டங்கள், தேசிய உணவுதொழில்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் பாஸ்கரன் உணவு  பதப்படுத்துதல் துறையில் தொழில்முனைவோராக மாறுவதற்கான திறன் சார்ந்த திட்டங்கள், தொழில்முனைவோர் மேம்பாடு-  புத்தாக்க நிறுவன கள  ஒருங்கிணைப்பாளர் சிவபாரதி தொழில்முனைவோருக்கான நிதி வாய்ப்புகள் ஆகிய  தலைப்புகளில் பேசினர்.

இதில் பேராசிரியர்கள் மலர்விழி, கவிதா, முருகநாதன்,  முனீஸ்வரன் மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ-  மாணவிகள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஜானகிராமன் நன்றி கூறினார்.

Related Stories: