கொத்தமங்கலம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார, விழிப்புணர்வு முகாம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 26: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தமிழ்நாடு கால்நடைத்துறை பராமரிப்புத் துறை மண்டல இயக்குனர் டாக்டர் தனபாலன் வழிகாட்டுதலில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் மேனகா கோபால் கிருஷ்ணன் முகாமை துவக்கி வைத்தார், கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் தலைமையில் டாக்டர் விஸ்வேந்தர், சந்திரன், ஆய்வாளர்கள் ஜெகநாதன், முருகானந்தம், கால்நடை உதவி பராமரிப்பு அலுவலர்கள் சந்திரசேகரன், ரஷ்யா, சுபாஷ் சந்திரன், விமலா, சதீஷ்குமார் மற்றும் அலுவலர்கள் 450 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி மற்றும் நோய்களுக்கான எதிரான தடுப்பூசி போட்டனர்.முகாமில் கருவூட்டல் மற்றும் சினை பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சைகள், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம் சிகிச்சை மற்றும் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிரான தடுப்பூசி போட்டு கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை வளர்ப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

Related Stories: