வளநாட்டின் புதூர் தலைமை கிராமத்தில் யானைமேல் அழகர் அய்யனார் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ஒரத்தநாடு,மார்ச் 22: உரந்தை வளநாட்டின் புதூர் தலைமை கிராமத்தில் யானைமேல் அழகர் அய்யனார் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள உரந்தை வளநாட்டின் புதூர் தலைமை கிராமத்தில் யானைமேல் அழகர் அய்யனார் கோவில் உள்ளது. அங்கு மகாகும்பாபிஷேகம் நேற்று மிகவும் சிறப்பாக நடந்தது. இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் புஷ்ப கலா உடனுறை யானை மேல் அழகர் அய்யனார் ஆலயம் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு மற்றும் பரிவார தெய்வங்கள் விநாயகர், முருகன், முன்னடியான், கருப்பண்ண சுவாமி, பாண்டி முனி, சடைமுனி, இடும்பன், துவாரபாலகர், குதிரை, யானை ஆகிய தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழாவில் சிவாச்சாரியர்கள் ஓதம் முழங்க கும்பத்தில் தண்ணீர் ஊற்றினர்.

நிகழ்வின்போது வானத்தில் வட்டமிட்ட ஹெலிகாப்டர் மூலம் பொதுமக்களுக்கும், பக்தகோடிகளுக்கும் மலர், மற்றும் கும்பாபிஷேக புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில் 10 அயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.

கும்பாபிஷேக விழாவில் ஒரத்தநாடு புதூர் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர், மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: