காமயகவுண்டன்பட்டியில் 12 டூ 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி

கம்பம், மார்ச் 17: கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் தமிழக அரசின் உத்தரவுப்படி நேற்று 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. முதற்கட்டமாக கேகே பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பேரூராட்சி தலைவர் வேல்முருகன், செயல்அலுவலர் மல்லிகா, தலைமையாசிரியர் முருகேசன், மருத்துவ அலுவலர் யோக பிரகதீஷ், சுகாதார ஆய்வாளர் அமரேசன் மற்றும் கவுன்சிலர்கள், சுகாதார செவிலியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் கஸ்தூர்பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி முன்னிலையில் 12 முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு கோர்பிவாக்ஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. தகுதிவாய்ந்த அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய அவசியம் குறித்து சித்த மருத்துவ அலுவலர் சிராஜூதீன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Related Stories: