திருவள்ளூரில் கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் அவதி: பூந்தமல்லியில் 111 டிகிரி கொளுத்தியது

திருவள்ளூர், ஜூன் 2:திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக பூந்தமல்லியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி எடுத்ததால் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள். அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் அனல் காற்றுடன் வெப்பம் பதிவாகி வருவதால் பெரும்பாலான மக்கள் பகல் நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் திருவள்ளூரில் இந்த ஆண்டு அதிகபட்சமாக 112 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தி எடுத்திருந்த நிலையில் நேற்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லியில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், திருவள்ளூர், திருத்தணி, ஆர். கே. பேட்டை பகுதிகளில் 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், வில்லிவாக்கத்தில் 107 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், புழலில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து 2 நாட்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

The post திருவள்ளூரில் கடந்த 2 நாட்களாக வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் அவதி: பூந்தமல்லியில் 111 டிகிரி கொளுத்தியது appeared first on Dinakaran.

Related Stories: