தோகைமலை மூங்கிலனை காமாட்சியம்மன் கோயிலில் மாசிபெருவிழா

தோகைமலை, மார்ச் 4: தோகைமலையில் மூங்கிலனை அன்னை காமாட்சியம்மன் கோயிலில் 42ம் ஆண்டு மாசிபெருவிழா கடந்த மாதம் 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் இருந்து மூங்கிலனை அன்னை காமாட்சியம்மன், பத்ரகாளியம்மன், பதினெட்டாம்படி கருப்பசாமி ஆகிய சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து மஹா சிவராத்திரி அன்று அனைத்து சாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டனர். 2ம் நாள் அன்று பால்குடம், காவடி மற்றும் தீச்சட்டி எடுத்துக்கொண்டு பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செய்து வழிபட்டனர். 3ம் நாள் நேற்று (வியாழன்) பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு 50க்கும் மேற்பட்ட கிடா வெட்டி விசேஷ பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மாசிபெருவிழா மற்றும் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

Related Stories: