தேர்தல் பணிக்காக தயார் நிலையில் வாகனங்கள் மாசிமகத்தையொட்டி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1008 பால்குட அபிஷேகம்

தஞ்சை, பிப்.18: இந்து சமய அறநிலையத்துறையின் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மாசி மகத்தையொட்டி 16ம் ஆண்டு 1008 பால்குட விழா நடைபெற்றது. முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு சார்பில் நடைபெற்ற விழாவிற்கு கவுரவத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்தார். ஜெயராமன் சுவாமிகள், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாசிமகத்தையொட்டி 1008 பால்குடம் மாரியம்மன்கோயில் கைலாசநாதர் கோயிலிலிருந்து புறப்பட்டு 4 ராஜவீதிகள் வழியாக அம்மன் சன்னதியை அடைந்தது.

பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை விடையாற்றி விழாவில் விஷ்ணு துர்கை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் உற்சவ அமமனுக்கு ஊஞ்சல் சேவையும் நடைபெற்றது. பால்குடவிழாவிற்கான ஏற்பாடுகளை முத்துமாரியம்மன் சுக்ரவார வழிபாட்டுக்குழு தலைவர் வேல்சாமி, பொருளாளர் துரைராஜன், நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், முருகன், பிரபு உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: