திருச்செந்தூர், பிப்.12: திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தினை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடக்கிறது. திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்கும், காயல்பட்டினம் நகராட்சிகுட்பட்ட 18 வார்டுகளுக்கும் மற்றும் பேரூராட்சிக்குப்பட்ட பகுதிகளான கானம், ஆத்தூர், ஆறுமுகநேரி ஆகிய இடங்களுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையமானது, திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் புனித தோமையார் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறவுள்ளது.
