செந்துறை அருகே மாரியம்மன் கோயில் பால்குட திருவிழா

செந்துறை,ஜன.29: செந்துறை அருகே வடக்குபரணம் கிராமத்தில் உள்ள மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிப்பட்டனர். அரியலூர் மாவட்டம் பரணம் கிராமத்தின் ஒரு பகுதியான வடக்கு பரணத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். பால்குட திருவிழாவை முன்னிட்டு பெரியேரி கரையில் பூசாரி தர்மலிங்கம் தலைமையில் சக்தி வழிபாடு நடத்தி பக்தர்கள் காப்பு கட்டி ஏரியில் நீராடினர்.

பூங்கரகம், தீச்சட்டி, பால்குடம் எடுத்த பக்தர்கள் அய்யனார் கோயில்தெரு, பெருமாள் கோயில் தெரு வழியாக பக்தி பரவசத்தோடு மேளதாளங்கள் முழங்க வீதியுலா வந்து மாரியம்மனுக்கு தங்கள் கொண்டு பாலை ஊற்றி அபிஷேக ஆராதனை நடத்தினர். பின்னர் பட்டாடை உடுத்தி, பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டு பிரசாதம் வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: