தென்காசி வடக்கு மாவட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம் மாவட்ட செயலாளர் செல்லத்துரை அறிக்கை

கடையநல்லூர், ஜன.28:  தென்காசி வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட நகராட்சி, பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை வெளியிட்டுள்ள அறிக்கையில்,   செங்கோட்டை நகராட்சிக்கு பொறுப்பாளர்களாக தென்காசி யூனியன் சேர்மன் ஷேக்அப்துல்லா, துணைசேர்மன் கனகராஜ் முத்துப்பாண்டியன், இடைகால் சி.எம்.குமார், ஆதிதிராவிட துணை அமைப்பாளர் பாட்டாக்குறிச்சி சுப்பிரமணியன், கடையநல்லூர் நகராட்சிக்கு பொறுப்பாளர்களாக விவசாய அணி துணை அமைப்பாளர் அப்துல்காதர், நெசவாளரணி துணை அமைப்பாளர் இன்பராஜ், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், மகளிரணி தமிழ்செல்வி முருகன், ஒன்றிய கவுன்சிலர் திரிகூடபுரம் அருணாசலபாண்டியன், புளியங்குடி நகராட்சிக்கு சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன், தகவல் தொழில்நுட்பஅணி துணை அமைப்பாளர் கிப்ட்சன், முருகானந்தம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 செங்கோட்டை புதூர் பேரூராட்சிக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் சுப்புராஜ், விஸ்வநாதபுரம் பஞ்சாயத்து தலைவர் கருப்பசாமி, அச்சன்புதூர் பேரூராட்சிக்கு மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஆதிதிராவிடர் குழு அமைப்பாளர் இலத்தூர் பரமசிவன், கொடிக்குறிச்சி ஊராட்சி தலைவர் உடையார், சிவகிரி பேரூராட்சிக்கு தீர்மானக்குழு உறுப்பினர் சரவணன், வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மன் பொன்முத்தையாபாண்டியன், வழக்கறிஞரணி பொன்ராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் நல்லசிவன், சாம்பவர்வடகரை பேரூராட்சிக்கு இளைஞரணி முத்துவேல், கடையநல்லூர் யூனியன் துணைசேர்மன் ஐவேந்திரன் தினேஷ், பொறியாளரணி அமைப்பாளர் கருப்பணன், ராயகிரி பேரூராட்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் வெள்ளத்துரை, வாசுதேவநல்லூர் பேரூராட்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் பூசைபாண்டியன்,  ஒன்றிய துணைத்தலைவர் சந்திரன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மாடசாமி, இளைஞரணி சரவணகுமார், வடகரை பேரூராட்சிக்கு தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் துரை என்ற ராமையா, ஒன்றிய மாணவரணி முத்துராஜ், மாவட்ட கவுன்சிலர் பூங்கொடி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வல்லம் திவான்ஒலி, பண்பொழி பேரூராட்சிக்கு தொண்டரணி அமைப்பாளர் கொட்டாகுளம் இசக்கிபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மதிமாரிமுத்து, தலைவர் அலி, ஆய்க்குடி பேரூராட்சிக்கு இளைஞரணி அமைப்பாளர் இலத்தூர் ஆறுமுகச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் கொடிக்குறிச்சி பகவதியப்பன்,  கிளாங்காடு ஊராட்சி தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: