தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல்: ஆன்லைன் கவுன்சலிங் 20 பேர் பணியிட மாற்றம்

ஈரோடு:  ஈரோட்டில் ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் ஆன்லைன்  கவுன்சலிங்கில் கடந்த 2 நாட்களில் 20 தலைமையாசிரியர்கள் பணியிடம் மாறுதல்  பெற்றனர். ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும்  அனைத்து நிலை ஆசிரியர்களுக்குமான பொது பணியிட மாறுதலுக்கான ஆன்லைன்  கவுன்சலிங் நேற்று முன்தினம் ஈரோடு பவளத்தாம்பாளையத்தில் துவங்கியது.  

இதில், நேற்று முன்தினம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளிகளில்  பணியாற்றும் தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் பணியிடம் மாறுதல்  பெறும் கலந்தாய்வு நடந்தது. இதில், பணியிட மாறுதல் கேட்டு  விண்ணப்பித்திருந்த 17 பேரில், 12 பேர் மாவட்டத்திற்குள் பணியிடம் மாற்றம்  பெற்றனர்.

இதேபோல், நேற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும்  தலைமையாசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடம் மாறுதலுக்கான  கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.  இதில், பணியிடம் மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்த 12 பேரில், 8  தலைமையாசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிடம் மாற்றம் பெற்றனர்.  இதையடுத்து, 8 பேருக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் மாற்றம்  பெற்றதற்கான ஆணையை வழங்கினார். கடந்த 2 நாட்கள் நடந்த கலந்தாய்வில் 20  தலைமையாசிரியர்கள் பணியிடம் மாற்றம் பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை  அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: