கே.வி.குப்பம் அருகே எருதுவிடும் விழாவில் மாடு முட்டி சிகிச்சை பெற்ற முதியவர் பலி

கே.வி.குப்பம், ஜன.26: கே.வி.குப்பம் அருகே எருது விடும் விழாவில் மாடு முட்டி சிகிச்சை பெற்ற முதியவர், பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் கடந்த 21ம் தேதி எருது விடும் விழா நடந்தது. இதில், அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையத்தை சேர்ந்த வெங்கடேசன்(62) என்பவர் விழாவை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது, சீறிப்பாய்ந்து வந்த ஒரு மாடு, பார்வையாளர்கள் மீது பாய்ந்தது. மேலும், அங்கிருந்த வெங்கடேசனை மாடு முட்டி தள்ளியது. இதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் உடனே மீட்டு, சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விஏஓ ராஜா கொடுத்த புகாரின்பேரில், கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

கேப்சன்வெங்கடேசன்.

Related Stories: