தஞ்சை மாவட்டத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு 15 இடங்களுக்கு 39 பேர் பங்கேற்பு

தஞ்சை, ஜன.25: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று நடந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வில் 15 காலியிடங்களுக்கு 39 பேர் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி, நகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்களுக்கு பிற மாவட்டங்களுக்கு இடையேயும், மாவட்டத்துக்குள்ளேயும் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் என தகுதிக்கேற்ப இந்த பணியிட மாறுதல் கலந்தாய்வு, தஞ்சாவூர் தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முதல் தொடங்கியது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 15 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனை நிரப்பிடவும், பணியிட மாறுதல் கோரியும் 39 தலைமை ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் முன்னிலையில், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று, அதில் தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. வரும் பிப்.23ம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

Related Stories: