மட்டங்கால் ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் சமுதாய கட்டிடம் பயன்பாட்டிற்கு விடப்படுமா?

கந்தர்வகோட்டை, ஜன.21: கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் மட்டங்கால் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சமுதாய கட்டிடம் ஏழை மக்கள் பயன்படும் வகையில் ரூ.45 லட்சத்தில் கட்டப்பட்டு தற்சமயம் பயன்பாடு இல்லாமல் உள்ளது. இந்த கட்டிடம் இரவு நேரங்களில் சமூக விரோத செயலில் ஈடுபடும் இடமாக மாறும் முன் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கொரோனா காலங்களில் அரசு சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு திருமண விழா, காதணி விழா, நிச்சயதார்த்தம் போன்ற விழாக்கள் நடத்த அனைத்து பிரிவினருக்கும் மட்டங்கால் ஊராட்சி நிர்வாகம் மூலம் குறைந்த வாடகைக்கு கொடுத்து செயல்படுத்தலாம். இந்த கட்டடத்தில் இருந்த மின்விசிறி மற்றும் பல பொருட்கள் மாயமாகி உள்ளது. மீதமுள்ள பொருட்களையும், கட்டிடத்தையும் பழுது நீக்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த சமுதாய கட்டிடத்திற்கு அருகிலேயே ஆதிதிராவிடர் தெரு உள்ளிட்ட பல தெருக்கள் உள்ளதால் இந்த சமுதாய கூடம் செம்மையாக செயல்பட்டால் அந்த பகுதியை சேர்ந்த ஏழை எளியோருக்கு பயனுள்ள வகையில் இருக்கும். பொருளாதார இழப்பு குறையும். இதனை உடனடியாக மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை தக்க நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரி க்கை விடுத்துள்ளனர்.

Related Stories: