விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயில் கோயில் கும்பாபிஷேக யாகசாலை மண்டபம் அமைப்பு

கும்பகோணம், ஜன.20: கும்பகோணம் அருகே கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயில் கும்பாபிஷேக யாகசாலை மண்டபங்களை அரசு தலைமை கொறடா கோவி செழியன், எம்பி ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர்.கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான் கோயில் தட்சண பண்டரிபுரமாக போற்றப்படுகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய தெய்வீக பசுக்கள் சேவை நோக்கத்துடன் வளர்க்கப்படுகிறது. புதிதாக 150 அடி உயர விமானத்துடன் மகாத்மா மகா மண்டபம், வசந்த மண்டபம், அர்த்த மண்டபம் என விசாலமாக கட்டப்பட்ட இக்கோயிலில் கடந்த 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.இதனைத்தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கும்பாபிஷேகம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கோயிலில் மீண்டும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் பிப்ரவரி 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்காக யாகசாலை மண்டபம், பிரம்மாண்டமான அளவில் நிகழ்ச்சி அரங்கம், அன்னதானக் கூடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இதனை அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். கோயில் ஸ்தாபகர் பிரம்ம  விட்டல்தாஸ் மஹராஜ் மற்றும் கோயில் நிர்வாக பொறுப்பாளர்கள் ஏற்பாடுகள் குறித்து விவரித்தனர். வரும் ஜனவரி 27ம் தேதி பூர்வாங்க பூஜைகளும், பிப்ரவரி 2ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும், தொடர்ந்து 8 காலம் யாகசாலை பூஜையுடன் 6ம் தேதி கோயில் விமானத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. அரசின் வழிகாட்டு நெறி முறைப்படி கும்பாபிஷேக விழா நடத்திடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.அரசு தலைமை கொறடா பார்வையிட்டார்

Related Stories: