ஆண்டாங்கோயில் மேற்கு ஊராட்சியில் முகக்கவசம் அணிய வலியுறுத்தி பிரசாரம்

கரூர், ஜன. 11: தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்கவும் மின்சார துறை அமைச்சா் செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின்படியும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் படி ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சியில் கொரோனா தொற்றை குறைக்க ஊராட்சி மன்ற தலைவர் கே.எம். பெரியசாமி தலைமையில் சிறப்பு பிரசார இயக்கம் ஊராட்சி மன்ற பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஊராட்சி பகுதியில் உள்ள அரசு கட்டிடங்கள், அரசு பொது சுகாதார நிலையம், அரசு பள்ளி கட்டிடம், அங்கன்வாடி மையம், குடிநீர் தொட்டி, டீ கடை, உணவகங்கள் ஆகியவற்றில் கொரோனா தொற்றை குறைத்திட பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி சுவர் விளம்பரம் எழுதப்பட்டுள்ளது.

மேலும் வீட்டை விட்டு வெளியே வரும் பொது மக்கள் முக கவசம் அணியாமல் வரும் பட்சத்தில் முதல் முறை ,இரண்டு முறை எச்சரிக்கை செய்யப்படும். அதன் பின்பும் தொடர்ந்து பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆண்டாங்கோவில் மேற்கு ஊராட்சிக்கு உட்பட்ட மொச்ச க்கொட்டம் பாளையம் ,கோவிந்தம் பாளையம், வேப்பம்பாளையம், ஆத்தூர் பிரிவு, காலனி ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தேவையில்லாமல் அபராதம் செலுத்துவதை தவிர்க்க கட்டாயம் வெளியில் வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதோடு அரசுக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் ஊராட்சி பகுதிகளில் சிறப்பு தண்டோரா மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

Related Stories: