ஆண்டிபட்டியில் பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி, ஜன.9: ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. இதனால் நீர்பிடிப்பு பகுதி, ஓடை, கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து காணப்பட்டது. வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் நீர்வரத்து அதிகம் ஏற்பட்டது. அதன்பிறகு படிப்படியாக மழை குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திம்மரசநாயக்கனூர், டி.சுப்புலாபுரம், அணைக்கரைபட்டி, சில்வார்பட்டி, மயாண்டிபட்டி, பாலக்கோம்பை, முத்தனம்பட்டி, க.விலக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. நேற்று இரவு பெய்த மழையால் ஆங்காங்கே நீர்வரத்து ஏற்பட்டது. நகர் பகுதிகளிலும் சாலையில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. மானாவாரி பயிர்களை பயரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திடீர் மழையால் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: