புதிய பஸ் நிலையத்தில் செங்கை நகராட்சி சார்பில் ஒமிக்ரான் விழிப்புணர்வு முகாம்: கலெக்டர் எஸ்பி ஆய்வு

செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் பரவல் அதிகமாவதை எதிர் கொள்ள பல்வேறு வழிமுறைகளை, மக்களுக்கு எடுத்துறைக்கும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுகிறது அதைதொடர்ந்து, செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், நகராட்சி சார்பில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று கோலமிட்டு, அந்த படங்களை பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளை கவரும் விதமாக,  கிராமிய கலைஞர்களின் நடன நிகழ்ச்சியுடன்  விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கலெக்டர் ராகுல்நாத், எஸ்பி அரவிந்தன் ஆகியோர், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், சானிடைசர், முகக்கவசம் வழங்கினர். கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டனர். தொடர்ந்து, பஸ் பயணிகளுக்கு கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி, பஸ் கண்டக்டர், டிரைவர் மற்றும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடித்து அடிக்கடி கைகால்களை கழுவி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல பகுதிகளில் இருந்து தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் அதிகளவில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, மாமல்லபுரம் ஸ்ரீ தலசயன பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது. அங்கு 5 பஸ்கள் நிறுத்தும் அளவில் மிக குறுகி காணப்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுற்றுலாப் பயணிகள், வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அவதியடைகின்றனர்.

இதையடுத்து, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் கடந்த 1992ம் ஆண்டு வெளிநாட்டை போல, அதிநவீன பஸ் நிலையம் அமைக்க திட்டமிட்டு, மாமல்லபுரத்தின் எல்லையான ஸ்ரீகருக்காத்தம்மன் கோயில் எதிரே 6.08 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக, அங்கு இருந்த குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருவாய்த்துறை மூலம் நிலங்கள் ஆர்ஜிதப்படுத்தி, மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இதுவரை பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையொட்டி, மாமல்லபுரத்தில் புதிதாக  பெரிய அளவில் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கடந்த 30  ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, 6.08 ஏக்கரில் நவீன பஸ் நிலையப் பணியை துவங்க மத்திய பொதுப்பணி துறை சார்பில் ₹18 கோடி நிர்ணயம் செய்து, அங்கு மண் பரிசோதனை நடந்தது. ஆனால், பணிகளும் துவங்கவில்லை.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் புதிதாக பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை கலெக்டர் ராகுல்நாத், நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், மாமல்லபுரம் உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.

இங்குள்ள, மக்கள் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். நான், மாவட்ட கலெக்டராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்த இடத்தை பார்வையிட வந்துள்ளேன். இது குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அவருடன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், வருவாய் ஆய்வாளர் ரகு, துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, விஏஓக்கள் நரேஷ்குமார், பூபதி உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: