அம்மன் கோயில்களில் திருவிழா

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரிக்கிலி கிராமத்தில் முத்து மாரியம்மன் மற்றும் கங்கை அம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் கரகம் மற்றும் திருவீதி உலா நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டு முத்துமாரியம்மன், கங்கை அம்மன் கரகம் ஊர்வலம் நடைபெற்றது. அப்போது, காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் கரகத்தை தங்களது தலையில் சுமந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். அதனைத்தொடர்ந்து, இரவு மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம விழா குழுவினர் செய்திருந்தனர்.

The post அம்மன் கோயில்களில் திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: