மாதர் சங்கம் பேரவை கூட்டம்

செங்கல்பட்டு: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் நேற்று செங்கல்பட்டில் மாவட்ட தலைவர் கலையரசி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் தமிழச்சி கலந்துகொண்டு கூட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் ஜெயந்தி மாவட்டத்தில் சங்க பணிகளை முன்வைத்தும் மாவட்டம் முழுவதும் பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைகள், பெண்கள் உரிமைகளை பாதுகாப்பது குறித்து பேசினார். மேலும், இப்பேரவை கூட்டத்தில் 2024ம் ஆண்டு மாவட்டம் முழுக்க 20 ஆயிரம் பெண்களை மாதர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்த்திடவும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உறுப்பினர் பதிவை நடத்திட குழுக்கள் அமைத்திடவும், கிராமம், நகரங்கள்தோறும் கிளைகளை உருவாக்கிட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது. முடிவில் மாவட்ட துணை செயலாளர் அனுசுயா நன்றி கூறினார்.

The post மாதர் சங்கம் பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: