திருப்போரூரில் உள்ள நல்லான் குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர் உத்தரவு

திருக்கழுக்குன்றம்: திருப்போரூரில் உள்ள நல்லான் செட்டி குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும், என்று மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். திருப்போரூர் கந்தசுவாமி கோயில் வடக்கு மற்றும் கிழக்கு குளக்கரை ஒட்டி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தற்காலிக கடைகளால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்படுவதாகவும், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும், நல்லான் செட்டிகுளத்தில் அதிகளவில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை, பாசிகள் ஆகியவற்றை அகற்றி சீர்மைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்று வடக்கு குளக்கரை பகுதியில் நேரில் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து, நல்லான் செட்டி குளத்தை ஆய்வு செய்தவர், உடனடியாக குளத்தில் உள்ள ஆகாயத்தாமரை கொடிகள், பாசிகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வில், செங்கல்பட்டு துணை ஆட்சியர் நாராயண சர்மா, இந்து அறநிலையத்துறை செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமிகாந்த பாரதிதாசன், திருப்போரூர் பேரூராட்சி மன்ற தலைவர் தேவராஜ், கோயில் செயல் அலுவலர் குமரவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருப்போரூரில் உள்ள நல்லான் குளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும்: மாவட்ட கலெக்டர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: