வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

சேந்தமங்கலம், ஜன.3: கொல்லிமலை எடப்புளி நாடு, சித்தூர்நாடு, பைல் நாடு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காய்கறி, மளிகைப்பொருட்கள் வாங்குவதற்காக முள்ளுக்குறிச்சியில், நேற்று கூடிய வாரச் சந்தைக்கு செல்வதற்காக செங்கரை பஸ் நிறுத்தத்திற்கு மதியம் வந்தனர். அப்போது அவ்வழியாக வந்த தம்மம்பட்டி செல்ல அரசு பஸ்சில் ஒரு சிலர் மட்டுமே ஏறிக்கொண்டனர். அதிகமாக இருந்ததால் அவ்வழியாக வந்த கல்யாண சீர்வரிசை ஏற்றி வந்த மினி வேனில், 20க்கும் மேற்பட்டோர் ஏறிக்கொண்டனர். வேனை எடப்புளி நாடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் ஓட்டி சென்றார். அப்போது நரியங்காடு முள்ளுக்குறிச்சி மாற்று வழி சாலையில், மேல் பூசணிகுழிப்பட்டி என்ற இடத்தில் வளைவில், மினி வேன் திரும்பும் போது சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ராசிபுரம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து செங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: