ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் மலை பகுதிகளில் அமைந்துள்ளன. ஊட்டியில் இருந்து முதுமலை மற்றும் மைசூருக்கு கல்லட்டி, மசினகுடி மலைப்பாதை மலைப்பாங்கான சாலையாகவும், கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் கொண்டதாகவும் உள்ளன. இதனால் சமவெளிப் பகுதிகளில் இருந்து வரும் சிலர் மலைப்பாதைகளில் வாகனங்களை இயக்கத் தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.இச்சாலையில் பாதுகாப்பாக வாகனங்களை இயக்க போலீசார் அறிவுறுத்தினாலும் அதனை கண்டுகொள்ளாமல் சில சுற்றுலா பயணிகள் வாகனங்களை வேகமாக இயக்கி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதனை தவிர்க்க காவல்துறை தற்போது இப்பாதையில் வெளி மாநிலம் மற்றும் வெளியூர் வாகனங்களை இயக்க தடை விதித்துள்ளது.