கே.வி.குப்பம் அருகே துணை தாசில்தாரை தாக்கிய வழக்கில் 2 பேர் குண்டாசில் கைது

கே.வி.குப்பம், டிச.30: கே.வி.குப்பம் துணை தாசில்தாரை தாக்கிய வழக்கில் இருவர் குண்டாசில் கைது செய்யப்பட்டனர். கே.வி.குப்பம் அடுத்த காமராஜபுரத்தில் துணை தாசில்தார் பலராமன் உள்ளிட்ட வருவாய் துறையினர் கடந்த 3ம் தேதி வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு ஒதுக்கிய நிலம் குறித்த ஆய்வு செய்ய சென்றனர். அப்போது, திருமணியை சேர்ந்த அல்லிபாபு(45), அவரது மகன் மனோஜ்(21), அவரது சகோதரர் மன்னார்(38) ஆகியோர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், அல்லிபாபு துணை தாசில்தார் பலராமனை கற்களால் தாக்கியும், ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து பலராமன் கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பக்டெர் செந்தில்குமாரி மன்னார், அல்லிபாபு, மனோஜ்குமார் ஆகிய 3 பேர் பேர் மீது வழக்குப்பதிந்து மன்னாரை கைது செய்தார். மற்ற இருவரும் காட்பாடி போலீசில் சரணடைந்தனர். அவர்களை போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, நேற்று திருமணியை அல்லிபாபு, அவரது மகன் மனோஜ்குமார் ஆகியோர் மீது எஸ்பி ராஜேஷ் கண்ணா பரிந்துரைபேரில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இருவரையும் குண்டாசில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, இருவரையும் குண்டாசில் கைது செய்தனர்.

Related Stories: