ஊட்டி, டிச. 27: ஊட்டி - மஞ்சூர் சாலையில் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து லவ்டேல், காத்தாடிமட்டம், கைகாட்டி வழியாக அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதுதவிர மலை காய்கறி பாரம் ஏற்றி வர கூடிய லாரிகள் இவ்வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் ஊட்டி 6வது மைல், நுந்தளா, தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரத்தில் இருபுறமும் தனியார் வாகனங்கள் அதிகளவு நிறுத்தப்படுகின்றன. இதனால் அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சீராக இயக்க முடிவதில்லை. எதிரே வரும் வாகனங்களும் வழியும் விட முடிவதில்லை.