காரைக்குடி மாங்குடி எம்எல்ஏ அறிமுகப்படுத்தினார்

காரைக்குடி, டிச.25: காரைக்குடி ராசி டிவிஎஸ் நிறுவனத்தில் புதிய டிவிஎஸ் டூவீலர்களான அப்பாச்சி ஆர்ஆர் 310 மற்றும் டிவிஎஸ் ரைடர் வாகனங்கள் அறிமுக விழா நடந்தது. மேலாளர் விவேக்கண்ணன் வரவேற்றார். ராசி டிவிஎஸ் குழும தலைவர் சந்தியாகு ஆரோக்கியம் தலைமை வகித்து பேசுகையில், ‘‘வாடிக்கையாளர்கள்தான் எங்கள் முதலாளிகள் என்ற தாரகமந்திரத்துடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தற்போது டிவிஎஸ் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு வாகனங்களும் மிகவும் பாதுகாப்பானதாகவும், அனைத்து தரப்பினரும் விரும்பக் கூடிய வகையிலும் உள்ளது’’ என்றார்.  

ஆர்ஆர் 310 வாகனத்தை அறிமுகப்படுத்தி எம்எல்ஏ மாங்குடி பேசுகையில், ‘‘இந்த வாகனம் வளர்ந்த பெரிய பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் ராசி டிவிஎஸ் நிறுவனத்தின் முயற்சியால் இப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பாராட்டக்கூடியது’’ என்றார். டிவிஎஸ் ரைடர் வாகனத்தை அறிமுகப்படுத்தி திரைப்படம், சின்னத்திரை இயக்குநர் திருமுருகன் பேசுகையில், ‘‘ராசி டிவிஎஸ்சில் வாகனம் வாங்கினால் ராசியாக இருக்கும் என்ற பேச்சு மக்களிடம் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடையும்’’ என்றார்.

நிகழ்ச்சியில் டெரிடெரி மேலாளர் உதயகுமார், திண்டுக்கல் ஆர்கே டிவிஎஸ் குமரேசன், சிவகங்கை அம்சராஜ் டிவிஎஸ் மகாதேவன், தேவகோட்டை என்என்எஸ் டிவிஎஸ் நாச்சியப்பன், மெக்கானிக் சங்க தலைவர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராசி டிவிஎஸ் நிர்வாக இயக்குநர் எஸ்தர் சந்தியாகு ஆரோக்கியம் நன்றி கூறினார்.

Related Stories: