டி.ஆர்.பாலு எம்பி, அமைச்சர் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம்

காஞ்சிபுரம், டிச.25: காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் டி.ஆர்.பாலு எம்பி தலைமையில் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்பி தலைமை தாங்கினார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி, வருவாய், சுகாதாரம், கல்வி, வேளாண், சமூக நலன், மகளிர் திட்டம் உள்பட அனைத்து துறைகளில் மத்திய அரசு பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு, பிரதம மந்திரி குடியிருப்பு, ஜல்ஜீவன் மிஷன், தூய்மை பாரத இயக்கம், பாரத மந்திரி கிராம சாலைகள் திட்டம், நாடாளுமன்ற உள்ளூர் தொகுதி மேம்பாடு, அனைவருக்கும் கல்வி இயக்கம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா ஆகிய திட்டப்பணிகளில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து எம்பி டி.ஆர் பாலு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து மதிய உணவு திட்டம், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சிகள்,  பொது சேவை மையங்களின் பயன்பாடு, நெடுஞ்சாலை நீர் வழிப்பாதை மற்றும் சுரங்க செயல்பாடுகள், மாவட்ட தொழில் மையம் செயல்படுத்தும் திட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தும் திட்டங்கள், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை கற்பிப்போம் திட்ட செயல்பாடுகள், மாவட்ட முன்னோடி வங்கி மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார். இதில் கலெக்டர் ஆர்த்தி, எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், வக்கீல் எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர் செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: