கன்னியாகுமரியில் நடைபாதை ஆக்ரமிப்பு கடைகள் அகற்றம்

கன்னியாகுமரி, டிச.21: கன்னியாகுமரியில் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசனையொட்டி பேரூராட்சி சார்பில் தற்காலிக கடைகள் ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவையடுத்து கடைகள் ஏலம் நடைபெறவில்லை.

 இதன்காரணமாக கன்னியாகுமரி கடற்கரை சாலை நடைபாதைகளில் வியாபாரிகள் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து நேற்று கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவநாதன், சுகாதார அலுவலர் முருகன், சுகாதார மேற்பார்வையாளர் பிரதீஷ் மற்றும் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் ஆவுடைப்பன் மற்றும் போலீசார் ஆக்ரமிப்புகளை அகற்றினர். நடைபாதையில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. மேலும் மீண்டும் கடை அமைத்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்.

Related Stories: