காவேரிப்பட்டணம் அருகே 70 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஏரி

காவேரிப்பட்டணம், டிச.20: காவேரிப்பட்டணம் ஒன்றியம், மிட்டஅள்ளி ஊராட்சி தாசம்பட்டி பாரத கோவில் ஏரி தொடர் மழை காரணமாக, 70 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. இதனையொட்டி பொதுமக்கள் ஏரியில் கங்கா பூஜை செய்து வழிபட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். கங்கா பூஜைக்கு ஊராட்சி தலைவர் காவேரி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்ரமணி, ஊர் கவுண்டர்கள் மாணிக்கம், சஞ்சீவன் மற்றும் மந்திரி கவுண்டர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி தலைவர் மணிமேகலை நாகராஜ் கலந்து கொண்டு, கங்கா பூஜையை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய துணை தலைவர் சசிகலா தசரா,  நகர திமுக செயலாளர் பாபு, ஓய்வு ஆசிரியர் தீர்த்தகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: