கிருஷ்ணகிரி, ஜூன் 29: ஓசூர் அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (37). இவர் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது செல்போனுக்கு, கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி, குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில் பகுதி நேர பணி உள்ளது. அதற்காக பணத்தை செலுத்தினால், அதிகளவில் லாபம் கிடைக்கும் எனவு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் கொடுத்திருந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசிய பெருமாள், அவர்கள் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, பல தவணைகளாக மொத்தம் ₹10 லட்சத்து 21 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் கூறியபடி எந்த வித லாபமும் கிடைக்கவில்லை. அந்த நம்பரை மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது, சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், நேற்று முன்தினம் இதுபற்றி கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஐ.டி. ஊழியரிடம் ₹10.21 லட்சம் மோசடி சைபர் கிரைமில் புகார் appeared first on Dinakaran.