முதல்வரிடம் திமுக மாநில நிர்வாகி ஆசி

ராமநாதபுரம், டிச.13: திமுக மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பெருநாழி போஸ், தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆசி பெற்றார். திமுக மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் பெருநாழி போஸ். இவர் தனது பிறந்த நாளை சென்னையில் நேற்று கொண்டாடினார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் ஆசி பெற்றார்.

இதைதொடர்ந்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர் ராஜா, அமைப்பு செயலாளர் அன்பகம் கலை, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் திமுக முன்னோடிகளிடம் நேரில் ஆசி பெற்றார். தொழிலாளர் முன்னேற்ற சங்க அடைக்கலராஜன், பெருநாழி ராஜா, வழக்கறிஞர்கள் சுரேஷ், நிறைபாண்டியன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: