தேவாரம் மலையடிவாரத்தில் மீண்டும் உலாவரும் மக்னா யானை விவசாயிகள் கலக்கம்

தேவாரம், டிச. 11: தேவாரம் மலையடிவாரத்தில் மீண்டும் மக்னா யானை உலா வருவதால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், தேவாரம் பகுதி மலையடிவாரத்தில் மக்னா யானை ஒற்றையாக உலா வருகிறது. இதுவரை 13 தோட்ட தொழிலாளர்களை அடித்துக் கொன்றுள்ளது. இதனால், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும், மக்னாவின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. வனத்துறையினர் யானை நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், அதிகாலை நேரங்களில் மலையடிவார தென்னந்தோப்புகளுக்கு வரும் மக்னா யானை தென்னங் கன்றுகளை, நிலங்களில் உள்ள பயிர்களையும் நாசம் செய்வதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தோட்டத்திற்கு செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, ஒற்றை யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: