15 ஆயிரம் இடங்களில் மின்பாதை பராமரிப்பு

சிவகங்கை, டிச.8: சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மின் பராமரிப்பு பணி நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் போர்க்கால அடிப்படையில் மின் வாரிய பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும் நேரம் அறிவிக்கப்பட்டது. தினமும் பகல் நேரத்தில் சுமார் 3 மணி நேரம் மட்டும் மின்சாரம் நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பணிகள் பெரும்பாலான இடங்களில் நிறைவடையும் நிலையில் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை மின் பகிர்மான வட்டத்திலுள்ள சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை மற்றும் திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட 25 துணை மின் நிலையங்களில் உள்ள அனைத்து மின் பாதைகளிலும் பகுதி வாரியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் மரக்கிளைகள் வெட்டுவது, சாய்ந்த, உடைந்த மின் கம்பங்களை சரி செய்வது, புதிய மின் கம்பங்கள், புதிய டிரான்ஸ்பார்மர்கள், இன்சுலேட்டர்கள் அமைப்பது, இழுவை கம்பி பொறுத்துதல், மின் கம்பிகள் தொய்வாக செல்லுமிடங்களில் சரி செய்தல் என சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பராமரிப்பு பணி நடந்துள்ளது.   

Related Stories: