மறுகால் பாயும் கண்மாய்கள்

திருவில்லிபுத்தூர், டிச. 7: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்டத்திலேயே பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய், பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. ஆண்டாள் கோயிலுக்கு சொந்தமான திருமுக்குளம் நிரம்பியுள்ளது. திருவில்லிபுத்தூர்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த கலெக்டர் மேகநாதரெட்டி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் குடையை பிடித்து கொண்டு கண்மாய், குளங்களை பார்வையிட்டு செய்ய வேண்டிய முன்னேற்பாடு குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.ஆய்வின் போது சிவகாசி சப்-கலெக்டர் பிருதிவிராஜ், நகராட்சி கமிஷனர் மல்லிகாஆண்டாள் கோயில் நிர்வாக அதிகாரி இளங்கோவன், தாசில்தார் ராமசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

More