கிராம சுகாதார செவிலியர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

திண்டுக்கல், டிச. 6: தமிழ்நாடு அரசு கிராமி சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நிர்மலா தலைமையில் திண்டுக்கல்லில் நடந்தது. மாநிலம் முழுவதும் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து பெற்றனர். இக்கூட்டத்தில், சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஞாயிற்றுக்கிழமை மெகா தடுப்பூசி முகாமை சனிக்கிழமைக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக முதல்வர், நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கின்றோம்.

கொரோனா தடுப்பூசி பணியில் கிராம சுகாதார செவிலியர்களை வாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். மே மாதம் நடத்த வேண்டிய பதவி உயர்வுக்கான கலந்தாலோசனை கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும்.மத்திய அரசு செவிலியர்களுக்கு இணையான சீருடை பணி ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மாத ஊதியம் ரூ.2 ஆயிரத்தில் பெண் உதவியாளர் நியமனம் வேண்டும் என்பதுள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், பொதுச்செயலாளர் பாப்பா, மாவட்ட துணைத்தலைவர் ரெமா, இணைச் செயலாளர் சந்தனமாரி பிரச்சார செயலாளர் மங்கையர்க்கரசி உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: