திருச்சுழி பகுதியில் மழையால் வெங்காய செடியில் திருகல் நோய்

திருச்சுழி, டிச. 2: திருச்சுழி அருகே உள்ள வடக்குநத்தம், மறவர் பெருங்குடி, சலுக்குவார்பட்டி, போத்தம்பட்டி, தொப்பலாக்கரை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட பரப்பளவில் ஒட்டு ரகத்தைச் சேர்ந்த வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளன. தற்போது மழையால், 60 நாட்களை கடந்த வெங்காய பயிர்கள் விளைச்சல் இல்லாமல் திருகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து வடக்குநத்தம் விவசாயி சங்கரபாண்டி கூறுகையில்: எங்கள் கிராமப்பகுதியில் பெரும்பாலான விவசாயநிலங்களில் ஒட்டு ரகத்தைச் சேர்ந்த வெங்காயம் பயிரிட்டுள்ளோம். பயிரிடப்பட்டு 60 நாட்களை கடந்தும் நோய் தாக்குதலால் பொதுமான அளவிற்கு விளைச்சல் இல்லாமல் உள்ளது. இதனால், லட்ச ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படும். எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கூறினர்.

Related Stories: