உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

ஈரோடு, டிச. 2: ஈரோடு மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் உலக எய்ட்ஸ் தின விழா விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேரணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். பின்னர் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு உறுதிமொழி வாசகம் அடங்கிய பாதாகையில் கையொப்பமிட்டு, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கோவிட் 19 தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய 37 பணியாளர்களுக்கு நற்சான்றிதழ், எச்ஐவி, எய்ட்ஸ் தடுப்பு பணிகளில் சிறந்த பங்களிப்பு வழங்கிய பணியாளர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார். நிகழ்ச்சியில், இணை இயக்குநர் கோமதி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More