ஒட்டன்சத்திரம், டிச. 1: ஒட்டன்சத்திரம் வட்டம், இடையகோட்டையில் நங்காஞ்சியாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் இடையகோட்டை, வலையபட்டி, நாரப்பநாயக்கன்பட்டி, கோவிந்தாபுரம், சின்னக்காம்பட்டி பகுதிகளில் 2,615 ஏக்கர் விவசாய நிலங்கள், கரூர் மாவட்டத்தில் சேந்தமங்கலம் கிழக்கு, சேந்தமங்கலம் மேற்கு, குறிக்காரன்வலசு, குறும்பபட்டி, பழனிக்கவுண்டன்வலசு பகுதிகளில் 3,635 ஏக்கர் விவசாய நிலங்கள் என மொத்தம் 6,250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.