ஊதிய உயர்வு கேட்டு ஒப்பந்த குடிநீர் பணியாளர் மனு மாநகராட்சி உதவி ஆணையரிடம்

வேலூர், ஏப். 23: மாநகராட்சி 1வது மண்டலத்தில் ஊதிய உயர்வு கேட்டு உதவி ஆணையரிடம் ஒப்பந்த குடிநீர் பணியாளர் மனு அளித்தனர். வேலூர் மாநகராட்சி 1வது மண்டலத்தில் 30 ஒப்பந்த குடிநீர் பணியாளர்கள் அனைவரும் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். எங்கள் மாதம் வருமானம் ₹4,500 முதல் ₹5 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. விலைவாசி உயர்ந்த வரும் சூழ்நிலையில் வாழ்க்கை எப்படி நடத்துவது என்பதே கேள்வி குறியாக உள்ளது. வேலூர் மாநகராட்சியில் பிற மண்டலங்களில் வேலை செய்யும் குடிநீர் பணியாளர்களுக்கு ₹7 ஆயிரம் முதல் ₹9 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. அதேபோல், 1வது மண்டலத்தில் பணியாளர்களிள் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று 1வது மண்டல உதவி ஆணையாளர் செந்தில்குமாரிடம், குடிநீர் பணியாளர்கள் மனு அளித்தனர்.

Related Stories:

>